யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டத் திடலில் சர்சைக்குரிய துணைவேந்தர்! நடந்தது என்ன?

யாழ் பல்கலை முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று சந்தித்தார்.

மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத் தவிர்ப்பு இடம்பெற்ற கொட்டகை பகுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்தார்.

மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது. அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்றும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளிடம் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன, ஆனால் அதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை

இன்று அதிகாலை 4 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த மாணவர்களை முக கவசம் அணியாம் துணைவேந்தர் சந்தித்து வாக்குறுதியை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது..

அதன் படி இன்று காலை சுபவேளையில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அங்கீகழிக்கப்பட்ட நினைவுத் தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.

இன்றைய ஹர்த்தாலை குழப்பும் ஒரு செயற்பாடாகவே துணைவேந்தரின் சந்திப்பு அமைந்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சர்திப்பினை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் சார்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.