நுரையீரல் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும்.
புகைப்பிடிப்பது போன்ற பழக்கம் கொண்டவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படும்.
அதே சமயம் எந்தவித தீய பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான பிரச்சினை வரும்.
ஏனெனில் இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும்.
மூன்றே நாளில் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம்.
சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.
இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.
மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் சாறு குடிக்கலாம்.
உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.