லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும் எந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டும் என்று பார்ப்போம்.
சூரியன்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சூரியனாரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சூர்ய நாராயணரே” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சந்திரன்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மகாலட்சுமியை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சுக்கிரன்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அம்பாளை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
செவ்வாய்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் முருகனை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
புதன்
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஸ்ரீராமனை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ராம ராம ராம, ஓம் நமோ, பகவதே வாசுதேவாய” என்ற மந்திரம் ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
குரு
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருக்கும் பட்சத்தில் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சனி
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “கோவிந்தா, ராமதாச ஆஞ்சநேய, அனுமன், நரசிம்மர் – யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே, சாஸ்தா – ஓம் தர்மசாஸ்தாவே சரணம்” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
ராகு
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துர்கை அம்மனை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
கேது
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருக்கும் பட்சத்தில் அவர்கள் விநாயகரை வணங்க வேண்டும்.
அதோடு தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.