பொதுவாக பழங்களை பொறுத்தவரை எல்லாவிதமான சருமத்துக்கும் பழங்களை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு பல வகையில் உதவுகின்றது.
அதிலும் அன்னாசிபழத்தினை கிடைக்கும் போது முகத்துக்கு இதை மட்டுமே பயன்படுத்தினால் சரும பிரச்சனைகளுக்கு அவை சிறந்த பலன் அளிக்கும்.
அந்தவகையில் இதனை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
முகப்பரு
அன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்.
பழத்தில் இருக்கும் நீர்ச்சத்தும் தேங்காப்பாலுமே போதும். இவை நன்றாக பேஸ்ட் பதத்துக்கு வந்ததும் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவினால் போதும்.
பிறகு சருமத்துக்கேற்ற மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இளமையாக இருப்பீர்கள்.
முகத்தழும்பு
அன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி நீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். முகத்தை சுத்தமாக கழுவி சுத்தமான காட்டனை சாறில் தோய்த்து முகம் முழுக்க தடவி விடவும்.
உலரும் வைத்திருந்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். அதிக மெனக்கெடல் இல்லாத பராமரிப்பு என்பதால் இதை தினமும் செய்து வரலாம்.
பிரகாசமான சருமத்துக்கு
அன்னாசிபழத்துண்டு மசித்து அதனோடு மாவு கலந்து பால் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும். நன்றாக தடிமனான ஃபேஸ் பேக் தயாரித்து முகம் மற்றூம் கழுத்துப்பகுதியை சுத்தமாக கழுவி முகம் மற்றும் கழுத்தில் பேக் போடவும்.
20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த பேக் போட்டு வந்தால் முகம் ஜொலிப்பதை கண்ணார காணலாம்.
மென்மையான உதட்டுக்கு
உதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை மினுமினுப்பாக வைத்திருக்க விரும்பினால் அன்னாசிபழச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வெள்ளை சர்க்கரை சேர்த்து உதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை கவர்ச்சியாக வைத்திருக்கலாம்.