235 யுவதிகளை வலைவீசி தேடும் பொலிஸார்; காரணம் இதுதான்

இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.டப்ளியூ. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாண உளவுப் பிரிவினரால் முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றது.

அதன்படி இதுவரையில் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 பெண்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஆர். லக்ஷமன் தெரிவித்துள்ளார்.