சுய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சாய்ந்தமருது அறிவிப்பு.!

சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டுச் செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கம்,

இணைந்து சாய்ந்தமருது முழுப்பிரதேசமும் நேற்று (15.01.2021) மாலை 8.00 மணியிலிருந்து அதிகாலை 04 மணி வரை சுயதனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது இது வரை 65 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளின் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த சுயதனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 7.00 மணியுடன் மூடுதல், வீதிகள் மற்றும் கடற்கரைப் பிரதேசங்களில் ஒன்றுகூடுவது தவிர்த்தல், எந்த நேரத்திலும் முகக்கவசம் அணிந்து கொள்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன அவசியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக பதுகாப்பு தரப்பினரின் உதவியோடு கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.