விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.