சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமிதேவி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன
வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதர்களின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர்கள் இல்லம், உணவு உண்ண அதிகநேரம் செலவிடாத இடம், பெண்களைத் தெய்வமாகப் பார்க்கும் ஆண்கள் உள்ள இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்வதாக வேதங்கள் சொல்கின்றன. இவை அனைத்தும் மகிழ்ச்சி பொங்கும் மங்கல இடங்களாகும்.