முல்லைத்தீவில் ஆதி ஐயனார் மயமானது எப்படி? புத்தர் திடீர் அவதாரம் ஏன்..

2015 இல் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் மடை பரவி பொங்கலிட்டு மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

2021இல் அங்கிருந்த சூலம் உடைத்து எறியப்பட்டு புத்த பெருமான் கொண்டு வரப்பட்டு வழிபாடுகளோடு விகாரை இருந்த இடம் என தெரிவித்து தொல்லியல் ஆய்வுகளை இராணுவத்தோடு இணைந்து இலங்கை தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

குமுளமுனை ,ஆண்டான்குளம் ,தண்ணிமுறிப்பு கிராம மக்களின் குல தெய்வமாக ஐயனார் இருக்கின்றார்.

இந்த கிராம மக்கள் வயலுக்கு செல்லும் போதும் காடுகளுக்கு வேட்டைக்கு செல்லும்போதும் ஐயனாரை வணங்கியே செல்வார்கள்.

ஒரு துன்பம் நிகழ்ந்தாலும் “என்ர ஐயனே” என்றுதான் உச்சரிப்பார்கள் . கிராமிய தெய்வமாகிய அய்யனார் எந்தவித ஆடம்பரங்ளும் இன்றி இரும்பினால் ஆன சூலாயுதமாக மரத்தடியில் இருப்பார்.

பாக்கு வெற்றிலை பழம் கொண்டு மடை பரவி மக்கள் வழிபடுவது வழமை

இதேவேளை குருந்தூர்மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தாக்கல்செய்ய வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலை கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூற பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து குறித்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயபடுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்டுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.