உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாற்றமாக கொவிட் டன் என்ற வைரஸ் பரவி வருகின்றது.
இதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரான தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் மூலம் நபர்களின் நாக்கில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாக்கில் சிகப்பு நிறத்தில் புள்ளிகள் அல்லது தழும்புகள் நோய் அறிகுறிகளாக பார்க்க முடியும்.
நாக்கு முழுவதும் இவ்வாறான அறிகுறி காணப்பட்டால் அதனை கொரோனா தொற்று என சந்தேகிக்க முடியும்.
அதற்கமைய PCR பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கொரோனா தொற்றினை உறுதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.