மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலின் அடிப்படையில் ரணில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மாறவுள்ளார்.

இந்த தேசிய பட்டியல் பதவி வெற்றி இதுவரையில் வெற்றிடமாகவே காணப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவண் விஜேவர்தன, பொது செயலாளர் பாலித பண்டார உட்பட கட்சியின் முன்வரிசை உறுப்பினர்கள் உட்பட பலர், ரணில் அந்த பதவியை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர் கட்சிக்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என கட்சியின் நிறைவேற்று அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய கட்சியின் கோரிக்கைக்கு அமைய அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரணில் தயாராகியுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, திலித் ஜயவீர ஊடாக அரசாங்கத்தின் பிரபலங்களுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.