PHI மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பாணந்துறை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் மீது நீயும் கொரொனாவை வாங்கு என கூறி எச்சில் துப்பியதுடன் சந்தேகநபர் வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.