பாதுகாப்பான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துணி முகக் கவசத்துடன் சத்திர சிகிச்சை முகக் கவசத்தை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் பாதுகாப்பானதாகும் என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக் கவசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகையின் தன்மைக்கமைய மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு என தீர்மானிக்கப்படும்.
உயர் திறன் கொண்ட முகக் கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது, நடுவில் உள்ள அடுக்கில் ஸ்பொஞ்ச் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக காற்று மட்டுமே செல்கிறது. தூசி போன்றவை அந்த ஸ்பொஞ்ச் வழியாக உள்ளே செல்லாது.
N95 அல்லது FFP2 போன்ற உயர் திறன் கொண்ட முகக் கவசம் அணிவதால் தூசி அல்லது வேறு எதுவும் உள்ளே செல்ல விடாமல் 94 வீதம் பாதுகாக்கப்படுகின்றது. ஏனைய சாதாரண முகக் கவசத்தில் 92 வீதமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
சாதாரண சத்திர சிகிச்சை முகக் கவசம் ஊடாக 60 – 70 வீதம் மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.