தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் மிகப்பெரிய சமூகத்தொற்றாக மாறியுள்ல நிலையில் ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் கொரோனா பாதிப்பின் ஆபத்தில் சிக்கியுள்ளதால் மக்கள் தமது பாதுகாப்பை தாமே பொறுப்பெடுக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.
இதேவேளை இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பி.சி.ஆர் சோதனையில் வடக்கிலிருந்து மொத்தமாக எட்டுப்பேருக்கும் கோப்பாய் சிகிச்சை மையத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதியானது.
இதில் யாழில் ஐவருக்கும் வவுனியா, மன்னார், கிளி நொச்சி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் ஏற்கனவே சிகிச்சைபெற்றுவருபவர்களாவர்.