12 ராசியில் இந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

கிரக நிலைப் பொறுத்து 12 ராசிக்காரர்களில் எந்த ராசிகள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

மேஷம்

இந்த ராசியினர் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் செவ்வாய் அதிபதியாக கொண்ட ராசி என்பதால் எதிலும் தைரியமாக செயல்படுவார்கள். இருப்பினும் எதையும் முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன் அதிக கோபப்படக்கூடிய ராசிகளும் நீங்கள் தான்.

எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய நிலை இருந்தாலும், எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள் என்பதால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை எட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும் உங்களின் உணர்ச்சி வசப்படக்கூடிய குணத்தையும், அடம்பிடிக்கும் குணத்தை சற்றூ மாற்றிக் கொள்வதால் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான உயரத்தை எட்ட முடியும்.

கடகம்

வலிமை வாய்ந்த ராசிகளில் கடகம் முதலிடத்தில் வருகிறது. யாரிடத்திலும் அன்பும், ஆதரவாக செயல்படக்கூடியது தான் கடக ராசியின் பலன் என்று கூறலாம்.

சிறிய விஷயங்கள் கூட இவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த விடமாட்டார்கள். தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்ளக்கூடிய இவர்கள் வாழ்வில் எதையும் வென்று காட்டுபவர்களாக இருப்பார்கள்.

இவர்களால் எதை செய்து முடிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதை முதலிலேயே தெரிந்து வைத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

அதிக ஆதிக்க சக்தியும், ஆதிக்க குணமும் நிறைந்தவர்கள் சிம்ம ராசிகள். அதிக ஊக்க சக்தி கொண்ட இவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் எடுத்த செயலை மிக சரியாக செய்து முடிப்பார்கள்.

இவர்களின் பேச்சாற்றலால், எதிரியாக இருந்தாலும் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வைப்பார்கள். இவர்களின் ஒரே ஒரு குறைபாடு கோபம் எனலாம்.

விருச்சிகம்

இவர்கள் இயல்பாகவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை முடிக்க தீவிரமாக செயல்படுவார்கள். இவர்களின் கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்வார்கள்.

இவர்களை சுற்றியுள்ளவர்கள் இவருடன் இருப்பதையே விரும்புவார்கள். ஏனெனில் இவர்கள் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆராய்ந்து, கணக்கிட்டு செய்வதால் அனைத்திலும் வெற்றி வாகை பெறக்கூடிய புத்திசாலிகளாக செயபடுவார்கள்.

​கும்பம்

அதிக அறிவாற்றலுடன் இருக்கும் கும்ப ராசியினர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்களின் வயதிற்கும் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்காது.

இளம் வயதினராக இருந்தாலும் அவர்களின் எண்ணமும், செயல்பாடு பெரிய மனிதர்களைப் போல் சிந்தித்து செயல்படுவார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் அதற்கான தீர்வை கண்டறிந்து வெற்றிக்கு செயல்படுவார்கள். எந்த ஒரு கடினமான நேரமாக இருந்தாலும் அதை எப்படி சமாளித்து முன்னேற வேண்டும், அல்லது வெறி பெற வேண்டும் என்பதில் ஆர்வமிக்கவர்கள்.