கொழுப்பை எரித்து புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் மல்லிகை தேநீர்! யாரெல்லாம் குடிக்கலாம்?

மல்லிகையில் தயாரிக்கப்படும் தேநீர் இது மூலிகைகளோடு சேரும் போது சுவையை கூட்டி கொடுக்கும்.

வழக்கமான உணவுக்கு பிறகு இதை குடிக்கும் போது உடல் குளிர்ச்சியை நீங்கள் உணரலாம்.

மல்லிகை தேநீர் பச்சை இலை தேயிலை அல்லது கருப்பு தேயிலையுடன் இணைந்து தயாரிக்கும் போது இது நறுமணமிக்க தேநீராக மாறுகிறது.

மல்லிகை தேநீர் தயாரிப்பு மற்றும் அதன் பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

​மல்லிகை தேநீர் தயாரிப்பு

முதலில் மல்லிகை தேயிலையை தரமானதாக தேர்வு செய்வது அவசியம். உங்களின் பட்ஜெட் உயர்ந்ததாக இருந்தால் சுவைமிக்கதான மல்லிகை தேநீரை நீங்கள் ருசிக்கலாம். இதன் பயிர்க்காலங்கள் அதிகம் என்பதால் இது அதிக விலையை கொண்டிருக்கலாம்.

 

8 அவுன்ஸ் நீருக்கு 1 டீஸ்பூன் அளவு மல்லிகை தேயிலை சேர்க்க வேண்டும்.

முதலில் நீரை காய்ச்சி கொதிக்கவிடுங்கள். மல்லிகை தேநீர் மென்மையானது தயாரிக்க எளிதானது. அதனால் இதை நீரோடு சேர்த்து கொதிக்க விட்டால் அதன் தன்மை கசப்பு அதிகமாகிவிடக்கூடும். அதனால் தண்ணீரை 160 முதல் 180 டிகிரி பாரன் ஹீட்டில் கொதிக்க வைத்து அதை கெட்டிலில் ஊற்றி பச்சை தேயிலை இலைகளை சேர்த்து (மல்லிகை தேயிலையாகவும் சேர்க்கலாம்.)

மல்லிகை பூக்களை சேர்க்கவும். மல்லிகை பூக்கள் மிதக்குமே அது தேயிலையில் மூழ்க கெட்டிலை அதற்கேற்றாற் போல் செங்குத்தாக வைக்கலாம். அல்லது பூக்கள் தேயிலையில் மூழ்கி இருக்கும் படி வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கழித்து வடிகட்டி சூடாக குடிக்கவும்.

நன்மைகள்
  • மல்லிகை தேநீரில் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை குறைக்க செய்கிறது. இது புற்றுநோய் எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது.
  • இன்சுலின் சுரப்பு சீராக செயல்படாத போது உண்டாகும் நீரிழிவு தடுக்க மல்லிகை டீ உதவும். க்ரீன் டீயிலிருந்து தயாரிக்கப்படும் மல்லிகை தேநீர் நிரீழிவு நோயை குறைக்க செய்யும். இது இன்சுலின் அளவை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.
  • மல்லைகை தேநீரில் எல் தியானைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது காமா- அமினோபியூட்ரிக் அமிலத்தை தூண்டுகிறது. இது நிதானமாக செயல்பட உதவுகிறது. வயதான பிறகு அல்சைமர் பார்கின்சன் நோய் அபாயத்தை தடுக்கவும் உதவுகிறது.
  • மல்லிகை டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்துவதன் முலம் உடல் எடையை குறைக்க செய்யலாம்.
  • மல்லிகை தேநீரில் பச்சை தேயிலை வளர்சிதை மாற்றத்தை 4 முதல் 5 % வரை வேகப்படுத்துவதோடு இது கொழுப்பு எரிப்பதை 10 முதல் 16% வரை அதிகரிக்க செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
  • இது அளவில் குறைவு என்றாலும் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 70 முதல் 100 கலோரிகளை எரிக்கலாம்.