வெறும் வயிற்றில் இந்த சக்திவாய்ந்த இயற்கை உணவு பொருளை சாப்பிடுங்கள்! என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து பறிக்கப்படும் அருமருந்தே தேன். அதனை அருமருந்து என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழுப்பு நிற திரவமே தேன் ஆகும். தேனை பரவலாக வயிற்றின் நண்பன் என்று கூட சொல்வார்கள். இதற்கு காரணம் வயிறு, பித்தப்பை சம்மந்தமான நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குவதே ஆகும். இனி தினமும் தேன் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

  • தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர். ஏனெனில் இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பதமானது தக்க வைக்கப்படுவதோடு, சருமத்தை மிருதுவாக்கி அதன் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.
  • தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.
  • தேனில் உள்ள பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் படை, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.
  • தேனில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றான்கள் (Oxidants) நிறைந்துள்ளது. இவை சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து காக்கிறது.
  • சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.
  • குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் வடிவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றல் அளித்து தசைகள் சோர்வடைவதைக் குறைக்கும்.
  • தேன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.
  • தேன் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
  • உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் பண்பு தேனுக்கு உள்ளது. மேலும் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.