நாட்டில் நேற்றைய தினம் 892 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!

நாட்டில் நேற்றைய தினம் 892 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது, இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 586 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 852 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 40 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 33 பேரும், ஓமானில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் அவர்களில் அடங்குகின்றனர்.

6 ஆயிரத்து 854 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.