நீதிபதி இளஞ்செழியன் யுத்த காலத்தில் வருகின்ற போது நான் “குட்மார்னிங் சார் ” என்று வழக்கம்போல மற்றைய ஊடகவியலாளர்களும் அவருக்கு வந்தனம் கூறினார்கள், பல்லைக்கடித்துக்கொண்டு வைத்தியசாலை பிணவறைக்குப் போன நீதிபதி அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றினார், நாங்கள் புகைப்படங்களை எடுத்தோம், எங்களது தொழிலின் தன்மைக்கு அமைவாக வீடியோவும் எடுத்தோம், சகல நடவடிக்கைகளும் முடிவடைந்ததன் பின்னர் வெளியே வந்த இளஞ்செழியன் நீதிபதி அவர்கள் எனக்கு முன்னால் வந்து நின்று கொண்டு பேசிக் கொண்டு போனார் என சிங்கள ஊடகம் ஒன்றில் தினசேன ரத்து கமகே எனும் ஊடகவியலாளர் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் எழுதிய இக் கட்டுரை மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலகி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சில முறன்பாடான சூழ்நிலைகளின் பின்னர் சிங்கள சமூக வலைத் தளங்களில் இத் தகவல் மீண்டும் பரவி வருகின்றது,
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
யுத்த காலத்தில் ” இது என்ன நாடப்பா இப்போ இந்த இடத்தில ஆமிக்காறங்க எட்டு பேர் செத்து இருக்கினம். எல்டிடிஈ 17 பேர் செத்து இருக்கினம். அவங்க யாராக இருப்பினும் இந்த நாட்டின் மக்கள்தான? ஏன் இது பெரிய மனுஷங்களுக்கு விளங்ககல்ல. விடியற்காலையில் சடலங்களை பார்த்துவிட்டு போய் நான் எப்படி நீதிமன்றத்திலே தீர்ப்புகள் வழங்குவது ? மனிதர்கள் தொழிலுக்கு மன மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் . இது என்டால் மிகவும் கொடுமையானது ” என்று சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிக் கூறிக்கொண்டு அவர் புறப்பட்டு சென்றார் .
அது 1996ஆம் ஆண்டு. பிபிசியின் உலகப் புகழ்பெற்ற செய்தியாளர் ஆகிய பிரான்சிஸ் ஹரிசன் உடன் அன்று மன்னாரில் விஜயம் செய்வதற்கு எனக்கு ஏற்பட்டது. பெரும் யுத்தகாலத்தில் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான அனுபவம் வழங்கக்கூடியதாக அப்பயணம் அமைந்து முடிவடைந்து மீண்டும் திரும்பி வருகின்ற தினத்தில் அவர் திடீரென என்னிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.
” இளஞ்செழியன் நீதிபதி தற்பொழுது இங்கு இருக்கிறார் நாங்கள் போகும் வழியில் அவரைச் சந்தித்து சிறிது உரையாடுவோமா? “
எனக்கெண்டால் தெரியாது இருந்தாலும் போவோம் என்று பதில் அளித்ததற்கு அமைவாக காலை ஆறு முப்பது மணி அளவில் நாங்கள் இருவரும் நீதிபதியின் உடைய உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றோம்.
பாதுகாப்பிற்காக நின்றிருந்த பொலிஸ் அலுவலருக்கு எம்மைப் பற்றிய தகவல்களை வழங்கி அதன் பின்னர் அவர் அத்தகவல்களை எழுதிக்கொண்டு் நீதிபதியினுடைய பங்களாவிற்குள் சென்றார் . சில நிமிடங்களின் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக வந்து கேட்டினை திறந்தார்.
நாம் இருவரும் நீதிபதியின் உடைய பங்களாவிற்குள் செல்கின்ற போது அவர் தனது வலது கையினை காட் சட்டை பைக்குள் வைத்துக்கொண்டு கருப்பு நிறத்திலான கோர்ட் அணிந்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயார் நிலையில் இருந்தார்.
பிரான்ஸிஸ் ஹரிசனைக் கண்டதும் “ஹலோ ஆஃப்டர் லோங் டைம் ஆயு ஹிய” எனக் கேட்டுக்கொண்டு இளஞ்செழியன் நீதிபதி அவரை வரவேற்றார் . ஹரிசன் என்னை அறிமுகப்படுத்தியதன் பின்னர் “குட் மார்னிங் ரத்து “எனக் கூறியதும் நான் எனது வலது கையினை அவருக்கு நீட்டி “குட் மார்னிங் சார்” என்று சொன்னேன்.
அவர்கள் இருவரின் உடைய உரையாடலுக்கு அமைய அவ்விருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என எனக்கு உணரக்கூடியதாக இருந்தது . அதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பிரதேசத்தில் அமைந்திருந்த மனிதப் படுகொலை தொடர்பான தகவல்களை அறிக்கை இடுவதற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட உறவாகும்.
நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் சேவையாளர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட கோப்பியினை இருவருக்கும் பரிமாறியது நீதிபதி அவர்களது கரங்களினாலாகும். அதன் பின்னர் சொற்ப நேரம் கதைத்துக் கொண்டிருந்ததன் பின்னர் நாங்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு தீர்மானித்தது நீதிபதி அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குள்ள தேவைப்பாட்டினை நாங்கள் அறிந்து கொண்டதனால் ஆகும்.
இதன் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு இளஞ்செழியன் நீதிபதி வவுனியா மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவுக்கு வந்தார் . வந்ததும் விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் பதினேழு பேருடைய சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார். அதனை அறிக்கை இடுவதற்கு நானும் அங்கு சென்றிருந்தேன் . பணிகள் நிறைவுற்றதன் பின்னர் நான் இளஞ்செழியன் நீதிபதியுடன் நிறைய விடயங்களை கதைத்துக் கொண்டு விடை பெற்றேன்.
ஒருநாள் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றினை அறிக்கை இடுவதற்கு சென்ற சந்தர்ப்பம் ஒன்றில் நானும் என்னுடன் சென்ற சகோதர ஊடகவியலாளர்கள் மூவரும் உட்காருவதற்கு ஆசனங்கள் இருக்கவில்லை.
நாங்கள் நால்வரும் நின்று கொண்டு தகவல்களை எங்கள் குறிப்புப் புத்தகங்களில் குறித்துக் கொண்டு இருக்கையில் நீதிபதி உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்து அவர் அவருடைய சமாதான அறைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழிவதற்கு முன்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொலிஸ் சார்ஜன் வந்து எங்கள் நால்வருக்கும் நான்கு கதிரைகளும் மேசை ஒன்றும் வழங்கி எங்களை உட்கார வைத்தார்.
பொலீஸ் அலுவலர் எங்களுக்கு கூறினர் நாங்கள் நின்று கொண்டிருந்தமை தொடர்பாக பொலிஸ் அலுவலரையே குறை கூறியதாகவும் நாங்கள் உட்கார்ந்ததன் பின்னர் மீண்டும் வந்த நீதிபதி அந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் நாங்கள் அந்த வழக்கு தொடர்பாக தகவல்களை அறிக்கை செய்தோம்.
இன்னும் ஒரு தினம் ஒன்றில் வவுனியாவில் வங்கி ஒன்றுக்கு முன்னால் வெடி குண்டுப் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல் இழக்கச் செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சாஜன் ஒருவர் தரையில் தவழ்ந்து கொண்டு வயர் ஒன்றினை எடுத்துக்கொண்டு வெடிகுண்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். நான் என்ன நடக்கின்றது எனப் பார்ப்பதற்கு மின் தூணுக்கு அப்பால் நின்று கொண்டு கமராவையும் வைத்துக்கொண்டு உற்றுநோக்கிப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
திடீரென ஒருவர் எனது முதுகில் தட்டி “அதோ எங்களது சேர் உங்களை கூப்பிடுகிறார் “என்று கூறியதனால் நான் திரும்பி பார்த்தேன்.
இளஞ்செழியன் நீதிபதி அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துவிட்டு பகல் உணவிற்காக தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு காரிலே சென்று கொண்டிருக்கையில் அவ்விடத்தில் நடைபெறுவதை அவதானிப்பதற்கு காரினை நிறுத்தியுள்ளார். நான் சம்பவம் தொடர்பான தகவல்களை கூறும்போது எனக்குத் தமிழ் மொழியிலே “மடையன் “என ஏசினார் .”செய்ய வேண்டியது எதுவாய் இருப்பினும் தன்னுடைய உயிர் பற்றிய அக்கறையுடன் நினைத்து செய்ய வேண்டும் “என எனக்கு அறிவுறுத்தல் வழங்கி அவர் அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் நடைபெற்ற தினம் வவுனியா வைத்தியசாலைக்கு இறந்த சடலங்கள் பல கொண்டுவரப்பட்டு களஞ்சியப் படுத்தப்பட்ட நாளாகும், காலை 7 மணியளவில் நானும் எனது சகோதர ஊடகவியலாளர்களும் வவுனியா வைத்தியசாலைக்குச் சென்று நீதிபதி வரும் வரையிலும் பார்த்துக்கொண்டிருந்தது விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை இடுவதற்காகவாகும்.
இளஞ்செழியன் நீதிபதியினுடைய வழக்கு விசாரணை போன்றே வழக்குகள் தொடர்பாக வழங்கப்படுகின்ற தீர்ப்புகளும் மிகவும் சவால் மிகுந்தவைகளாகும்.
அக்காலப்பகுதி பெரும் யுத்த காலப் பகுதியாக இருந்த அதே நேரம் ஆயுதக்குழுக்களின் அங்கத்தவர்கள் வழக்கினை நிர்வகித்த ஒரு காலமாகும். ரூபா.70,000 கப்பமாக பெற்றுக் கொண்ட சம்பவம் ஒன்றில் ஆயுதக் குழுக்களின் இளைஞர்கள் இருவருக்கு எதிராக வழக்கு சார்த்தப்பட்டிருந்தது.
சட்டத்தரணிகள் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் நீதிபதி இளஞ்செழியன் எதிரிகள் இருவரையும் நோக்கி இவர் உங்களுக்கு பணம் தருமதியாக இருக்கின்றதா ?என்ற கேள்வி மாத்திரமே கேட்டார் . இருவரும் இல்லை எனக் கூறியதும் உடனடியாகப் பணத்தை மீளச் செலுத்துவதற்கு கட்டளையிட்ட இளஞ்செழியன் நீதிபதி ஆயுதக் குழுவின் அங்கத்தவர்கள் இருவரையும் இரண்டு வருடங்களுக்கு சிறைச்சாலைக்கு அனுப்பினர்.
ஆயுதக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கு எதிராக பல வழக்குகளில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கையில் வடக்கின் சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள் பலராலும் மாவட்ட நீதிபதிக்குத் தனது உயிருக்குள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கவனத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் நீதிபதி அவற்றினை துச்சமென கருதிச் செயலாற்றினார்.
வவுனியாவில் கொள்ளை , திருட்டு உள்ளிட்ட 104 குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட நபரொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருக்கு எண்பது வருட சிறைத்தண்டனை விதித்து இளஞ்செழியன் நீதிபதி தீர்ப்பளித்த சந்தர்ப்பத்தில் எதிரி உரத்த குரலில் கூறியது
“சரி நான் திரும்ப வந்தா பார்த்துக் கொள்றன்” என்பதாக.
திறந்த மன்றிலே இருந்த சகலரும் ஒரு கணம் திகைத்து நிஷ்ஷப்தம் அடைந்தார்கள் . இருப்பினும் இளைஞன் நீதிபதி சிரித்துக்கொண்டு சொன்ன பதில் “எனக்கு வயது 45. உமக்கு வயது 47. 80 வருட சிறைத்தண்டனை அனுபவித்து திரும்ப வரும்போது நீரும் ,நானும் இல்லை. ஆகையால் பார்த்துக் கொள்வதற்கு எதுவும் மிச்சமில்லை என்பதாக மாத்திரமே.
இளஞ்செழியன் நீதிபதி வவுனியா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றுகின்ற காலப்பகுதியில் நீதிமன்றத்தில் வழக்கொன்று இல்லாதிருக்கும் தரப்பினரும் அவருக்குத் தனிப்பட்ட ரீதியாக தபால் மூலமாக கடிதங்கள்அனுப்புவதற்கு வவுனியா மக்களுக்கு இயலுமாக இருந்தது. அதை வாசித்துப் பார்த்து அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது அவரது பழக்கமாகும் .
வவுனியா மகறம்பைக்குளம் கிராமத்தின் பெண்கள் குழு ஒன்றிடமிருந்து நீதிபதிக்கு கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது . அதில் தமது கணவன்மார் ஒவ்வொரு நாளும் கள்ளச்சாராயம் அருந்வதுவதனால் குடும்பங்களில் பிணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி மாகாணத்தின் உயர் பொலிஸ் அலுவலருடன் கதைத்தார். பொலிசாருக்கு உளவுத் தகவல் கொடுத்தவர் நீதிபதி ஆவார். பொலிசார் பல நாட்களாக வவுனியா மகறம்பைக்குளம் கிராமத்தில் சோதனையிட்டும் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் சாராயம் விற்பனை செய்த மூவரும் மறுநாள் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகள் குறித்த மூவரும் தனது இயலாமை, வறுமை காரணமாக மதுபானம் விற்பனை செய்ததாகத் தெரிவித்தனர்.
அம்மூவருடைய கைகால்களைக் காட்டுமாறு கூறிய நீதிபதி “பாருங்கள் உங்கள் கை கால்கள் நன்றாக இருக்கையில் ஏன் இதுபோன்ற கெட்ட வேலைகளைச் செய்கின்றீர்கள்? இந்தா பாருங்கோ எனது கை செயலிழந்து உள்ளது, இருந்தாலும் நான் நல்ல தொழில் ஒன்றை செய்கின்றேன் தானே? எனக் கூறினார்.
தண்டனை விதிக்காத நீதிபதி அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஊடாகக் கலந்துரையாடி சுயதொழில் செய்து பிழைப்பதற்காக ஆடுகள் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இளஞ்செழியன் நீதிபதியி்னுடைய வலது கையில் வலது குன்றிப்போனது அவரது சிறு வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட போலியோ நோயினால் என்ற விடயம் அன்று மன்னாரில் வைத்து பிரான்சிஸ் ஹரிசன் என்ற அப்பெண் நிருபராலாகும்.
இளஞ்செழியன் நீதிபதியின் உடைய சம்பவங்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புகள் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்களில் எங்களால் எழுத முடியும். அந்த அளவிற்கு அவர் அற்புதமான ஒரு நீதிபதி. அவர் எல்லாவற்றையும் செய்தது யதார்த்தமாகவாகும்.
நீதிபதி கதிரைக்கு அப்பால் இறங்கி விசாரித்த வழக்குகளின் எண்ணிக்கை எண்ணற்றவையாகும். தண்டப்பணம் செலுத்துவதற்கு பணம் இல்லாதவர்களுக்கு அவருடைய பக்கற்றுக்குள் இருந்து பணம் வழங்கி தண்டப் பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்த சந்தர்ப்பங்களும் உண்டு .
யாழ்ப்பான மேல்நீதிமன்ற நீதிபதியாக தற்பொழுது அவர் கடமையாற்றுகின்றார். வித்யா என்ற மாணவியினுடைய கொலை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு வந்திருந்த சிறிய பிள்ளை ஒன்று கடந்த ஜூலை 12ஆம் திகதி நீதிமன்றத்துக்குள் மயக்கமுற்று தரையில் விழுந்துள்ளார்.
பிள்ளையினுடைய தகப்பனிடம் அவருக்கு ஏதேனும் நோய்கள் உண்டா என வினவபட்டுள்ளது. “இல்ல சேர் காலையிலேயே வர வேண்டி இருந்த படியினால் வந்த நாங்கள். பிள்ளைக்கு சாப்பாடு இருக்கல்ல. அவருக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு எடுத்துக் கொடுப்பதற்கு என்னிடம் காசு இருக்கல்ல.”
தந்தை அவ்வாறு கூறியதும் தனது பணப்பையில் இருந்து பணத்தை எடுத்து நீதிமன்ற சேவையாளர் ஒருவரின் கையிலே கொடுத்து பிள்ளைக்கு உடனடியாக உணவை வழங்குமாறு பணித்துள்ளார். உண்டு வயிறு நிறைந்து நீதிமன்றத்திற்கு மீண்டும் வருகை தந்த அப்பிள்ளை கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிளிப்பிள்ளை போன்று பதிலளித்துள்ளார்.
இவ்விதம் பேசப்படுகின்ற இளஞ்செழியன் நீதிபதி தொடர்பாக மீண்டும் ஞாபகத்தை புரட்டிப் போட்ட சம்பவம் அவருடைய பாதுகாப்புக்காக இருந்த பொலிஸ் சார்ஜன் (24330 ) ஹேமச்சந்திர கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் துப்பாக்கிதாரி ஒருவருடைய வெடித் தாக்குதலுக்கு இலக்காகி மரணத்தின் பின்னர் பொலிஸ் சார்ஜனுடைய மனைவி தனது கணவரை பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் இளஞ்செழியன் நீதிபதி அழுது பிரலாபித்து கும்பிட்ட காட்சியாகும்.
ஆரம்பத்தில் மனைவி வருகின்ற போது கைள் இரண்டையும் ஒன்றாக்கி சார்ஜனுடைய மனைவியைக் கும்பிட்டு நமஸ்கரித்து மன்னிப்பு கோருகின்ற அளவிற்கு நீதிபதி இளஞ்செழியன் பண்பு மிக்க கனவானாகும்.
அவர் தனது இரண்டு முழங்கால்களையும் தரையிலே வைத்து கும்பிட்டு நமஸ்கரிக்கும் போது கூறியதாவது பொலிஸ் சார்ஜன்ட் மரணித்தது தன்னை பாதுகாக்கப் போனதாலேயே என்று. அத்துடன் நீதிபதி உரத்த குரலில் விம்மி விம்மி அழுது பிரலாபித்து் தலையினை சுவரிலே அடித்துக்கொண்டார். அவரை ஆசுவாசப்படுத்தியது மரணித்த சாஜனுடைய மனைவியாகும்
மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மிகவும் குறைந்த வயதில் இந்நாட்டிலே நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவராகும், அவருடைய அபிப்பிராயம் நீதியைப் பாதுகாக்கின்றமையாகும், அத்துடன் இன்றைய சூழலில் முழு இலங்கையராலும் விரும்பப் படும் சிறந்த மனிதம் மட்டுமல்ல மொழியைக் கடந்து அதிகமாக நேசிக்கப்படும் சிறந்தவர் என தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.