மட்டக்களப்பில் நகரத்தில் அரச உத்தியோகம் வேண்டும் என கேட்போர் மத்தியில் இப்படியும் சிலர்!

அரச உத்தியோகம் வேண்டும் அதுவும் தனது வீட்டுக்கு அருகிலேயே வேண்டும். தன் பிள்ளை மட்டும் வசதியான பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் . ஆனால் அதி கஷ்டப்பிரதேச பிள்ளைகள் எப்படி போனாலும் பரவாயில்லை. என்றெல்லாம் சிலர் சுயநலமாக சிந்தித்து வாழும் வேளையில் சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

கிட்டத்தட்ட 13 வருடங்களாக மட்டக்களப்பின் எல்லையில் உள்ள அதிகஷ்ட கிராமங்களான உத்துசேனை, வடமுனை மாணவர்களுக்காக தம்மையே அர்ப்பணித்து சேவையாற்றுவதோடு, ஆசிரிய சேவையின் உன்னதத்தினையும் துலங்கச்செய்யும் இவ் ஆசிரியர்கள் உண்மையில் கடவுளுக்கு நிகரானவர்கள் தான்.

மழையினையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது கடமை ஒன்றே குறிக்கோளாய் இவர்களைபோல் நல்ல ஆசான்கள் கிடைத்த மாணவர்கள் உண்மையில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

இவர்களின் ஆசியப்பணி சிறக்க சமூக ஆர்வர்கள் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்