நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது இன்று பளபளக்கும் பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் மயங்கி இருக்கும் நாம் நம் பாரம்பரிய அரிசியான சிவப்பு அரிசியை பெருமளவு பயன்படுத்துவதில்லை.
சிவப்பு அரிசி தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
- பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம்.
- இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.
- சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது. இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.
- சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது.
- அரிசியின் வெளிப்புற அடுக்கு அப்படியே வைக்கப்படுவதால் இது நார்ச்சத்தின் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டையும் கொண்டுள்ளது. உடலில் சேரும் உயர் கொழுப்புகளை கட்டுப்படுத்த அதிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.
- சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
- பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடும். எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கவும் செய்கிறது.இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைகளை தடுக்க செய்கிறது.
முக்கிய குறிப்பு
பொதுவாக நெல்லில் வெளியே இருப்பது உமி, உள்ளே இருப்பது தவிடு, அதனுள் கரு, கடைசியாகத்தான் மாவுப்பொருள் என நான்கு பகுதிகள் இருக்கும்.
நாம் மூன்றையும் வெளியேற்றி சத்தில்லாத மாவுப்பொருளை தான் எடுத்துகொள்கிறோம்.
ஆனால் சிவப்பு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் மாவுச்சத்தில் சென்று சேர்க்கப்படுவதால் இதை தீட்டிய பிறகும் நாம் சத்தை பெற்றுவிட முடியும்.