தமிழ் சினிமாவான கோமாளி படத்தின் கதைப்போல், பிரிட்டனில் இளைஞர் ஒருவர் 11 மாதம் கோமாவில் இருந்து மீண்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் அந்த இளைஞருக்கு கொரோனா தொடர்பில் எதுவுமே தெரியவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பற்றி விளக்குவது என்று உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
பிரிட்டனின் Burton-ல் உள்ள Staffordshire என்கிற பகுதியில் மார்ச் 1-ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கிய 19 வயதான Joseph Flavill என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் மூன்று வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
ஆனாலும், அந்த சமயம் மார்ச் 23,2020 அன்று முதல் பிரித்தானியாவில் முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனையடுத்து, மருத்துவமனையில் தொடர்ந்து 11 மாத காலம் Joseph Flavill கோமாவில் இருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு இருமுறை கொரோனா ஏற்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து Joseph Flavill குணமாகி உள்ளதுடன் கோமாவில் இருந்தும் மீண்டு இருக்கிறார்.
மேலும், உலக நாடுகளை இப்படி ஆட்டம் காட்டிய கொரோனா தொடர்பாக அவருக்கு எப்படி விளக்குவது என அவரது உறவினர்கள் சற்று குழப்பமாக இருந்து வருகின்றனர்.