அமெரிக்காவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு உடலிலேயே மது சுரக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சாரா லிபிப்வ்ரே(38) என்ற இந்த பெண்ணுக்கு ஆட்டோ பிரீவரி சிஸ்டம் (ABS) எனப்படும் மிக மிக அரிதான நோய் இருக்கிறது.
இதனால் அவர் உடலில் தானாகவே மது சுரப்பதாகவும், இதனால் அவர் போதையாகிவிடுவதாகவும் கூறுகிறார்.
மேலும், இந்த அரிய நோயால் அமெரிக்காவில் தலைப்புச்செய்திகளிலேயே வந்துவிட்டார் சாரா லிபிப்வ்ரே. தனக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என போராடி வருகிறார்.
இதில் காமெடியான விஷயம் என்னவென்றால், சாரா லிபிப்வ்ரேவுக்கு குடிப்பழக்கமே கிடையாது.
இவர் மதுவை விரும்புவதுமில்லை. ஆனாலும், இவர் உடலில் எப்போதும் மது இருப்பதால் மதுபோதையில் இருப்பதாக மருத்துவர்கள் தவறாக எடுத்துக்கொள்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், இந்த விசித்திர நோயால் தினசரி வாழ்க்கையில் நிறைய அவதிகளை சந்தித்து வருகிறார் சாரா லிபிப்வ்ரே.
உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாக போலீசார் தவறாக எடுத்துக்கொள்கின்றனர்.
ஆரம்பகாலத்தில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என தெரியாமல் இருந்த சாரா லிபிப்வ்ரேவுக்கு அண்மையில்தான் பிரச்சினையின் மூலக்காரணம் மற்றும் நோய் பற்றி தெரியவந்தது.
தற்போது அவர் மருந்துகளை சாப்பிட்டு வருகிறார். விரைவில் அவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.