உங்க கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்?

நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை கண் முன்னே கொண்டு வருவது தான் கனவு என்று அழைக்கப்படுகின்றது.

கனவுகளில் நல்ல கனவுகள், கெட்ட கனவுகள் என்று இருவகை உண்டு.

அதிலும் சிலருக்கு கனவுகள் மிகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் தோன்றும். குறிப்பாக கனவில் கடவுள்கள் வருவது, பேசுவது போன்று காணப்படும்.

ஆனால் இதற்கு என்ன அர்த்தங்கள் என்று குழம்பி போவதுண்டு. எனவே <கனவுகளில் எந்த கடவுள் வந்தால் என்ன மாதிரியான என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • நம் கனவில் சிவன் வந்தால் நம் தொடர்ச்சியான தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றாகும்.
  • முருகன் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்றாகும்.
  • விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலையில் நல்லனவையே நடக்கும் என்றாகும்.
  • பெருமாள் வந்தால் புதிதாக தொடங்கும் தொழில் நன்கு வளரும் என்றாகும்.
  • விஷ்ணு பகவான் வந்தால் நாம் செல்வந்தர் ஆகுவோம் என்றாகும்.
  • அம்பாள் கனவில் வந்தால் வீட்டில் நல்ல சுப காரியங்கள் நிகழும்.
  • குலதெய்வம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மேலும் நல்ல சுபிட்சம் வ௫வதை குறிக்கும்.
  • யானை துரத்துவது போல கனவு கண்டால் விநாயக௫க்கு ஏதோ நீங்கள் செய்ய வேண்டியது பாக்கி உள்ளது என அர்த்தம்.
  • கோவில் கோபுரம் வந்தால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி விட்டது போலவும் நல்ல நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்றும் அர்த்தமாகும்.
  • கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் குறை இன்றி, நல்லது உண்டாகும் என்பதாகும்.