நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 66,000ஐக் கடந்தது…!

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,000ஐக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் 711 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 66,409 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 62,416 ஆக அதிகரித்துள்ளது.

6,194 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 840 பேர் குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,883 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு 139,914 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 21,147 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.