மூக்கை அழகுப்படுத்த வேண்டும் என ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகையின் வாழ்க்கை மோசமாக அமைந்துள்ளது.
பொதுவாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூக்கு, உதடு மற்றும் முக அழகை மாற்றிக்கொண்ட நடிகைகள் ஏராளம்.
அப்படிப்பட்ட நடிகைகளுள் ஒருவர் தான் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ.
இவர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் தனது முக அழகை மேலும் வசீகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.
இதனால், தனது நடிப்பு வாழ்க்கை மேலும் உயரும் என்று நம்பி கடந்த ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் தனது மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால், அந்த அறுவை சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததால் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
இதனால், இந்திய மதிப்பில் ரூபாய் 45 இலட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்த இடம் பழைய நிலைக்கு திரும்பாமல் கருமை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதையடுத்து, சீன சமூக வலைத்தளமான வெய்போவில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கோ லியூ, “நான்கு மணி நேர அறுவை சிகிச்சை என்னை மிகவும் அழகாக மாற்றும் என்று நம்பினேன்.
ஆனால், அது மோசமான கனவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனவும் யாரும் இப்படி முயற்ச்சிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.