எந்த ஜனாதிபதிகளும் செய்யாததை நான் செய்கிறேன்! என் வழி இப்படித்தான் இருக்கும் – ஜனாதிபதி கோட்டபாய

எவ்வளவு விமர்சனங்கள் வந்தால் எனது வழிமுறைகளுக்கு அமையவே செயற்படுதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்தங்கிய கிராமங்களுக்கு பொதுவாக ஜனாதிபதிகள் செல்வதில்லை. எனினும் மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கே நாங்கள் கிராமத்திற்கு வருகின்றோம்.

சில ஊடகங்கள் இது அரசியல் நாடகம் என தகவல் வெளியிடுகின்றன. இவை அவ்வாறானவை அல்ல. ஊடக விளம்பரம் நடத்துவதற்கு தேர்தல் காலப்பகுதி அல்ல. அதற்கு மேலும் 4 வருடங்கள் உள்ளன.

சுற்றாடலுடன் அபிவிருத்திகளை எவ்வாறு செய்வதென்பதே நாங்கள் கற்பிக்கின்றோம். நான் ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி ஆனேன்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளராக நான் செயற்படும் போது கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளை அலங்கரித்தேன். என்னை பலரும் விமர்சித்தினர்.

எனினும் நான் செய்த விடயங்கள் சரியானதாக தான் இருந்தது. ஏன் கிராமங்களுக்கு செல்கின்றீர்கள் என பலர் கூறினார்கள். எனினும் நான் எனது பாணியிலேயே வேலை செய்வேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.