180 வயது வரை இளைமையாக இருக்கவேண்டும் என தொழிலதிபர் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை செலவளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவை சேர்ந்தவர் 47 வயதான டேவ் ஆஸ்ப்ரே (Dave Asprey).
இவர் 180 வயது வரை இளமையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதற்காக தனது ஸ்டெம் செல்களை (Stem cells) உடலுக்குள் செலுத்திக் கொள்ளும் சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டு வருகிறார்.
மேலும், இந்த சிகிச்சையை ஒரு முறை மேற்கொள்ள இந்திய மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாய் செல்வாகிறதாம்.
குறைந்தது 2153ம் ஆண்டு வரையிலாவது வாழ்ந்தாக வேண்டுமென்ற விருப்பத்துடன் பணத்தை செலவழித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தெரிவித்த டேவ் ஆஸ்ப்ரே, வயதாகும் போது நமது ஸ்டெம் செல்களும் அதோடு சேர்ந்து காலியாகி விடும்.
அதேபோல் தான் எனக்கும் நடக்கும். அதனால் அதை நான் தடுக்க என்ன செய்கின்றேன் என்றால், இடைவிடாது உண்ணா நோன்பு இருக்கிறேன்.
அதன் மூலம் அதிக ஸ்டெம் செல்களை பெறுகிறேன். அதனை எனது உடலுக்குள் தேவையான இடங்களுக்கு நகர்த்திக் கொள்கிறேன்.
அதன்மூலம் நான் என்றுமே எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.