பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களில், சிவப்பு பட்டியலில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிவப்பு பட்டியலில் உள்ள 33 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி வரும் 15-ஆம் திகதி பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வருகிறது. அதன் படி, சிவப்பு பட்டியல் நாடுகளில்(கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகள்) இருந்து பிரித்தானியாவிற்கு வருவோர், அரசு நியமித்திருக்கும் ஹோட்டலில் குறைந்த பட்சம் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த சிவப்பு நாடுகளின் பட்டியலில் 33 நாடுகள் உள்ளது. குறிப்பிட்ட 33 நாடுகளில் இருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் விமான நிலையத்திலிருந்து நேராக நியமிக்கப்பட்ட ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை செலவிடுவார்கள். இதற்காக பயணிகள் 1,750 டொலர் வரை செலவிட வேண்டியிருக்கும்.
இதே போன்ற ஹோட்டல் நடைமுறை விதிமுறைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஏற்கனவே உள்ளன.
பிரித்தானியாவிற்கும் வரும் எவரும், சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வந்தால், அவர்கள் வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
அதன் படி தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள 33 நாடுகளின் பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
Angola
Argentina
Bolivia
Botswana
Brazil
Burundi
Cape Verde
Chile
Colombia
Democratic Republic of the Congo
Ecuador
Eswatini
French Guiana
Guyana
Lesotho
Malawi
Mauritius
Mozambique
Namibia
Panama
Paraguay
Peru
Portugal (including Madeira and the Azores)
Rwanda
Seychelles
South Africa
Suriname
Tanzania
United Arab Emirates (UAE)
Uruguay
Venezuela
Zambia
Zimbabwe
தற்போதைக்கு இந்த 33 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இதைத் தவிர இன்னும் சில நாடுகள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.