இந்தியாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமனாரை மருமகள் பொதுவெளியில் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் அவரின் மாமனார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். சமீபகாலமாக மருமகளுக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் மிகவும் துன்புறுத்தி வந்தார்.
மேலும் அவரை வீட்டை விட்டு அடித்து துரத்தியிருக்கிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடினார்.
தனது மாமனார், மாமியார் மீது அவர் புகாரளித்தார். இந்த நிலையில் நேற்று மாமனார், மாமியார் மற்றும் மருமகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் மாமனாரை பார்த்த போது மருமகளுக்கு கடும் கோபம் வந்தது.
இதை தொடர்ந்து பொது வெளி என்றும் பாராமல் தனது செருப்பை கழட்டி மாமனாரை கடுமையாக தாக்கினார்.
பின்னர் அங்கிருந்த பொலிசார் அப்பெண்ணை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தினார்கள்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வரதட்சணை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.