2வது திருமணம் செய்து கொண்ட சில மாதத்தில் தற்கொலை செய்த 39 வயது பெண்! அவர் எழுதியிருந்த கடைசி வாக்குமூலம்

இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 39 வயதான பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகமாதாபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல். இவருக்கும் ஹர்ஷா பட்டேல் (39) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு வாசலில் விஷம் குடித்து ஹர்ஷா தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள். உயிரிழந்த ஹர்ஷாவின் வலது தொடையில் தனது கடைசி வாக்குமூலத்தை அவர் எழுதிருந்தார் என பொலிசார் கூறினர்.

அதன்படி கணவர், மாமனார், மாமியார் தான் தனது தற்கொலைக்கு காரணம் என எழுதிருக்கிறார்.

இதோடு நீண்ட கடிதம் ஒன்றையும் ஹர்ஷா எழுதி வைத்திருக்கிறார்.

அதில், மருத்துவரான கணவர் ஹிதேந்திரா தினமும் தனக்கு மயக்க மருந்து கொடுத்து அரை மயக்கத்தில் வைத்து சீரழித்ததோடு மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என எழுதப்பட்டுள்ளது.

இதோடு மாமனார், மாமியார் தன்னிடம் தங்கம் மற்றும் பணத்தை வரதட்சணையாக கேட்டு டார்ச்சர் செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் ஆதாரமாக வைத்து பொலிசார் ஹிதேந்திரா, அவர் பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.