கதறிய தாயின் கையை உதறிவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்… ஏக்கத்தில் நின்ற அண்ணன்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தான் காதலித்த இளைஞரை விடாமல் பிடித்துக்கொண்டு தாயின் கதறலை கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி கல்லூரியில் படித்து வரும் பவித்ரா.

இரவில் நீண்ட நேரம் போன் பேசிக்கொண்டிருந்தவரை தாய் விசாரித்த போது, பாடம் சம்பந்தமாக பேசுவதாக கூறியுள்ளார் பவித்ரா.

பின்பு அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வருவதையறிந்த தாய் அவரிடமிருந்த செல்போனை பறித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பவித்ரா மாயமாகியதால், அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவர் பீமாராவ் என்பவரின் கையை பிடித்துக் கொண்டு காவல்நிலையம் வந்த பவித்ரா, இவரைத் தான் நான் காதலிக்கிறேன், நாங்கள் மேஜர் என்பதால் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அவரது தாய், பவித்ராவிடம் கெஞ்சி கதறி அழுதுள்ளார். தாயின் கதறலை சிறிதும் பொருட்படுத்தாத பவித்ரா இறுதிவரை தனது முடிவில் நின்றுள்ளார்.

இவரது தாய் செல்போனை உன்னிடமே கொடுத்துவிடுகிறேன், அவனையே திருமணம் செய்து கொள்… இரண்டு மாதத்தில் கல்லூரி முடிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தந்தை வாதநோயால் படுத்த காரணத்தினால் செங்கல் தூக்கி வட்டிக்கு கடன் வாங்கி படிக்க வைத்ததாகவும், 5 லட்சம் கடன் இருப்பது மட்டுமின்றி உடன்பிறந்த 4 தங்கைகளுக்காக 34 வயதாகியும் உனது அண்ணன் திருமணம் செய்யாமல் இருப்பதாகவும் கதறியுள்ளார்.

ஆனால் தாயின் கைகளை உதறிவிட்டு, காதலனின் கையை இறுக்க பிடித்துக்கொண்டு மனசாட்சியின்றி அந்த இளைஞரையே திருமணம் செய்யப்போகிறேன் என்று சென்றுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் தங்கையின் முகத்தினைக் கூட பார்க்காமல், துக்கத்தில் அண்ணன் திரும்பிநின்று பரிதவித்துள்ளார்.