இந்தியாவில் பெண்களிடம் அத்துமீறும் நபர்களின் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது தகாத சீண்டல் ஆகாது என தீப்பளித்தார்.
இந்த நிலையில் அவரது தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதேபோல் மற்றொரு வழக்கிலும் அவர் அளித்த தீர்ப்பு சர்ச்சையானது. எனினும் மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் கூடுதல் நீதிபதி பதவிக்காலம் 2 ஆண்டுகளாக இருந்ததை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.