வன்னியில் விடுதலைப் புலிகளால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட விற்பனைச் சிட்டைகள் குறித்த தகவல்கள் முகநூலில் பலராலும் பெருமையாக பேசப்படுகின்றது.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சிக் காலத்தில் பெரிய பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த விற்பனைச் சிட்டைகள் கடந்த 2003ஆம் ஆண்டளவிலேயே வன்னியில் அறிமுகப்படுத்தப்பட்டமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கணினித் தொடர்பாடல் முறைமை அப்பொழுதுதான் வளர்ச்சியடைந்துவந்த நிலையில் மிகத் தரமான மென்பொருளை உருவாக்கி இவற்றை வடிவமைத்திருந்தமையே இன்று இதுபற்றி பலராலும் பேசப்படுகின்றது.
அன்றைய காலத்தில் இருந்த விண்டோஸ் XP 40GB hard disc மற்றும் குண்டு மௌஸ் போன்ற வன்பொருட்களுடன் 128mb ram இனைக்கொண்டு தற்போதைய சிறப்பங்காடிகளில் பயன்படுத்தப்படும் விலைச் சிட்டைகளுக்கு இணையான இந்த சிட்டைகளை விடுதலைப்புலிகள் உருவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக தற்போதைய Point of sale மென்பொருளுக்கு இணையாக அதுவும் கடினமான கணினி மொழிகளை கையாண்டு அதற்கேற்றாற்போல் காசாளர்களை பயிற்றுவித்து ஒரு பொதுவான பண்பியலாக மாற்ரியமைத்தமை இன்றைய கால கண்ணோட்டத்தில் மிகப்பெரும் சாதனையென்றுதான் சொல்லமுடியும் என பலரும் முக நூலில் குறிப்பிட்டுள்ளனர்.