கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோவிட் எச்சரிக்கை

கொழும்பில் கோவிட் வைரஸின் புதிய மரபணு வேகமாக பரவு கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வைரஸ் மரபணு கொழும்பு நகரில் வேகமாக பரவுவுதாக அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தரவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய திருமண நிகழ்வு, பிறந்த நாள் விழா மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் நடத்தி செல்வதனை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முடிந்த அளவு மக்கள ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டும். உரிய சுகாதார முறைகளை பின்பற்றவில்லை என்றால், கொழும்பு நகரில் பாரிய அளவு கொரோனா பரவ கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.