வெள்ளரிக்காய் நீரின் உள்ளடக்கம் அதிகம் கொண்டிருக்க கூடியது. தேசிய ஊட்டச்சத்தின் படி வெள்ளரிக்காயில் நீர், வைட்டமின் கே, வைட்டமின் சி, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்பி குழுமத்தில் உள்ள சில வைட்டமின்கள், வைட்டமின்கள் ஏ, நார்ச்சத்து, எலக்ட்ரோலைட்டுகள் கொண்டுள்ளது.
இதை எளிதாக வீட்டில் தயாரிக்கலாம். சுவையான எளிமையான சத்தான ஆரோக்கிய பானமாக இருக்கும் வெள்ளர்க்காய் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும்.
வெள்ளரிக்காய் விதை சாற்றின் 500 மி.கி. எடுத்துவந்த அஹிப்பர் லிபிடெமிக் நோயாளிகளுக்கு உதவுகிறது.
வெள்ளரி விதையை ஆரோக்கியமான வெள்ளரி சாற்றின் பகுதியாக சேர்ப்பது உடலில் ஹெச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். அதே போன்று உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பான எல்டி.எல் கொழுப்பை குறைக்கவும் செய்யும்.
எனினும் இது குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவை.
உடல் எடையை குறைக்க முயற்சித்தால் நீங்கள் செயற்கை, இனிப்பு பானங்களை தடை செய்வது நல்லது என்று சொல்லலாம்.
அதே நேரம் பழச்சாறுகளுக்கு மாற்றாக வெள்ளரி நீர் உங்கள் உணவில் இருக்கும் தீவிரமான கலோரிகளை குறைக்க செய்யும்.
உடல் நீரேற்றமாக இருப்பது எப்போதும் வயிறு நிறைந்த உணவை உணரவைக்கும். சில நேரங்களில் உங்களுக்கு முழுதான் வயிறு நிறைவை உண்டாக்கும்.
தாகமாக இருக்கும் போது பசி உணர்வு உண்டாகும். அப்போது வெள்ளரி நீர் குடித்து வந்தால் பசி உணர்வு அடங்கும். வெள்ளரி நீர் குடித்த பிறகும் பசி உணர்வு இருந்தால் அதற்கு காரணம் பசியாக இருக்கலாம். இந்த அற்புத ஜூஸ் ஒரே வாரத்தில் எடை குறைக்க உதவி புரியும்.