இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட உயிரிழப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உண்மையான தகவல்கள் கிடைக்காமையினால் சுகாதார பணியாளர்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கீழ் மட்டத்தில் இடம்பெறும் உண்மையான மரணங்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்படுவதில்லை.
இதன் காரணமாக சுகாதார பணியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் இடம்பெறும் மரணங்கள் தரவுகளுக்குள் உள்ளடக்கப்படுவதில்லை. இதனால் அது கொரோனா மரணம் இல்லை என்ற குழப்பம் ஏற்படுகின்றது.
தரவுகள் சரியாக இல்லை என்றால் அது குழப்ப நிலையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.