நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை சிறைச்சாலை துப்புரவுப் பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அந்த பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மலசலகூடங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி அவர் கழுவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் அவர் விசேட கைதி என்பதனால் சிறைச்சாலைக்கு வெளியே பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.