சமாதானம் பேச நம்பி சென்ற மனைவி… ஓடும் காரில் தலைமுடியைப் பிடித்து அரங்கேறிய கொலை

மருத்துவர் ஒருவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த மருத்துவரான கோகுல்குமார்(40). இவர் பிரைவேட் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில், மதுராந்தங்கம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இவருக்கு கீர்த்தனா(33) என்ற மனைவி இருக்கும் நிலையில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா லாக்டவுன் காலங்களிலும் வேலைக்குச் செல்ல வேண்டியதாகியுள்ளது. ஆனால் கோகுல் வேலையில்லாமல் 10 மாதத்திற்கு மேலாக வீட்டிலிருந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் நாளுக்கு நாள் அதிகமாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் தாய்வீட்டிற்கு சென்ற கீர்த்தனா கணவரை விவாகரத்து செய்யவும் சென்றுள்ளார். இந்நிலையில் சமாதானம் பேசுவதாக மனைவியை அழைத்த நிலையில், கீர்த்தனாவும் காரில் ஏறியுள்ளார்.

அப்பொழுதும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கீர்த்தனாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல், கீர்த்தனாவின் முடியை பிடித்து வெளியே இழுத்து வந்து ரோட்டில் தள்ளிவிட்டு, காரையும் ஏற்றி கொன்றுள்ளார்.

கீர்த்தனாவின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கோகுலைப் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிஒடியுள்ளார். தகவலறிந்த பொலிசார் கீர்த்தனாவின் சடலத்தினைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பிச்சென்ற கோகுலையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.