மே 15 பின் வாட்ஸ் அப் புதிய ப்ரைவசியை ஏற்காவிட்டால் என்ன நடக்கும்?.. விளக்கமளித்த நிறுவனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாகவும், வணிக நிறுவனங்களுடன் பகிர இருப்பதாகவும் செய்தி பரவியதையடுத்து பல யூசர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற மாற்றுச் ஆப்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆனால், இந்த முறை வாட்ஸ் அப்பின் குறிப்புகள் மாறிவிட்டன. WhatsApp Business-யின் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்ற எந்த அழுத்தமும் இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், நிபந்தனைகளை ஏற்காமல் நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும். ஆனால் முன்பு செய்தவற்றை இப்போது செய்யமுடியாது. சில அம்சங்கள் தான் உங்களுக்கு கிடைக்கும்.

இது தொடர்பாக, யூசர்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெற முடியும் என்றாலும், அவர்கள் ஆப்ஸிலிருந்து எந்த செய்திகளையும் படிக்கவோ அனுப்பவோ முடியாது என்று TechCrunchன் அறிக்கை கூறுகிறது.

இதுவும் ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை யூசர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் யூசரின் கணக்குகள் குறுகிய காலம் அல்லது சில வாரங்களுக்கு மட்டும் நீக்கப்படும்.

இதனையடுத்து, நிறுவனத்தின் FAQ பக்கத்தில், வாட்ஸ்அப் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் , வாட்ஸ்அப்பில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் நிதானமாக படித்து மதிப்பாய்வு செய்ய உங்களுக்கு போதுமான நேரத்தை நாங்கள் வழங்குகிறோம்.

அதற்கான இறுதி நாளாக மே 15 நாங்கள் நிர்ணயித்துள்ளோம். எங்கள் நிபந்தனையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் உங்கள் கணக்கை நீக்காது.

இருப்பினும், நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை வாட்ஸ்அப்பின் முழு செயல்பாடு உங்களிடம் இருக்காது.

குறுகிய காலத்திற்கு, நீங்கள் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெற முடியும், ஆனால் பயன்பாட்டிலிருந்து செய்திகளைப் படிக்கவோ அனுப்பவோ முடியாது என குறிப்பிட்டுள்ளது.

எனவே, ஒரு யூசர் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், மே 15லிருந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் மாதத்தில் அதாவது ஒரு தேதியில் யூசரின் கணக்கு நீக்கப்படும். இது சம்மந்தமாக வேறு ஒரு செய்தியும் வரலாம்.