சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்ரின், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவருக்கும் தாம்பரத்தை சேர்ந்த பூபதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அம்ரின் தனக்கு திருமணமானதை மறைத்து பூபதியிடம் பேசியுள்ளார்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாற, இருவரும் பழகி வந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 20ம் தேதி சேலத்துக்கு செல்வதாக கூறிவிட்டு பூபதி, அம்ரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தான் அவர் திருமணமானவர் என்பதும், இரண்டு குழந்தைகளின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது.
எனினும் அம்ரினின் கணவர் வீட்டில் இல்லாததால், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர், சிறிது நேரத்தில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு அம்ரின் செல்ல, திரும்பி வந்து பார்த்ததும் பூபதி சடலமாக தொங்கியுள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அம்ரின், போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூபதியின் சடலத்தை கைப்பற்றி அவரிடமிருந்த மஞ்சள் தாலி, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பூபதியின் தற்கொலைக்கான பின்னணியை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.