முகப்பருவை போக்கும் பூசணி! இப்படி பயன்படுத்தி பாருங்க

இன்றைய காலத்தில் ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பரு.

இந்த முகப்பரு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் இருந்தால், சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி பருக்களாக மாறும். சிலசமயம் முகப்பருக்கள் ஒருவரது தன்னம்பிக்கையை கூட இழக்கச் செய்யும்.

அவ்வளவு மோசமான முகப்பருவைப் போக்க பல வழிகள் இருக்கலாம். ஆனால் இயற்கை வழிகளே சிறந்தது.

தற்போது முகப்பருவை போக்கும் ஒரு சூப்பரான வழிமுறை ஒன்றை பற்றி பார்ப்போம்.

தேவை
பூசணி துண்டுகள் மசித்தது – 2 டீஸ்பூன்
வால்நட் பருப்பை பொடித்தது – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை
பூசணி மசித்த கூழ் உடன் வால்நட் பவுடரை நன்றாக கலக்கவும். இந்த கலவையில் தேன் தயிர் இரண்டையும் சேர்க்கவும். பிறகு இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை முகத்தில் ஸ்க்ரப்போன்று வட்ட வடிவ இயக்கத்தில் தடவி எடுக்கவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலசி எடுக்கவும்.

பூசணிக்காயில் உள்ள என்சைம்கள் மற்றூம் வைட்டமின்கள், வால்நட் பவுடர்கள். தயிர் சேர்ந்து இறந்த செல்களை வெளியேற்றுகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்லை வெளியேற்றி சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.

தேன் இயற்கை சுத்தப்படுத்தி அதோடு ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்து பளிச் என்று வைக்கிறது. இறந்த செல்கள் நீங்குவதால் முகப்பரு வருவது பெரிதும் தடுக்கப்படுகிறது.