கொரோனா வைரஸ் ஆனது உடைகளிலும் இத்தனை நாட்கள் தங்குமாம்.. எப்படி தெரியுமா? பீதியை கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்

ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன.

தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் இருக்க, புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத்தொடங்கி சுமையை அதிகரிக்கின்றன.

கொரோனா பற்றி சில அடிப்படை விஷயங்களாக எப்படி பரவுகிறது என தெரியாமல் இருந்து வருகிறது. இந்த கேள்விகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கொரோனா போன்ற வைரஸ்கள் ஆடைகளிலேயே சில தினங்கள் வரை தங்கியிருக்கும் என டி மோண்ட்போர்ட் லெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், மூன்று நாட்கள் வரை ஆடைகளில் கொரோனா வைரஸ் தங்கியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளனர்.

ஆடைகளிலேயே பாலியெஸ்டரில் (polyester) தயாரிக்கப்பட்ட ஆடைகளே அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலியெஸ்டரில் மூன்று நாட்கள் வரை கொரோனா தங்குவது மட்டுமல்லாமல், மற்ற இடங்களுக்கு பரவவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

பருத்தி ஆடைகளில் 24 மணி நேரமும், பாலிகாட்டனில் 6 மணி நேரமும் கொரோனா தங்குவதாக கூறுகின்றனர்.