கொழும்பு உள்ள பிரதான நிறுவனத்தில் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் அதிகாரி தமிழ்ப் பெண் செயலாளரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி பம்பலப்பிட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண் செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட பிரதான நிறைவேற்று அதிகாரியோ (CEO) இன்னும் விசாரிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கொழும்பில் உள்ள இன் நிறுவனத்தில் நடந்த இரண்டாவது துஷ்பிரயோக சம்பவமாகும்.
ஏற்கனவே 2017ல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ்ப் பெண் செயலாளரை, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) துஷ்பிரயோகம் செய்து தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கைதாகி பிணையில் வெளி வந்திருக்கும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் கடைமை செய்ய அனுமதித்திருப்பதானது, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) என்கிற வகையில் அங்கு கல்வி பயிலும் பெண் மாணவர்களுக்கு மேலும் அச்சுறுத்தலும் குறித்த நிறுவனத்தின் நற் பெயருக்கும் இழுக்கு என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? விடுதலைப்புலிகளின் தலைவர் மகளையும் கூறி தமிழ் பெண்ணை திட்டியுள்ளார்.