மஹிந்த – ரணில் அவசர இரகசிய சந்திப்பு; கசிந்த தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையே பெந்தொட்டையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் கூறுகையில்,

“ஆம் அது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு. சந்திக்க வேண்டும் என கேட்டிருந்தார். மற்றவர்களுக்கு பிரதமரை பாராளுமன்றில் சந்திக்க முடியும். நான் இந்த சந்திப்பில் பொருளாதாரம் குறித்து பேசினேன். அவர் நிதி அமைச்சர் தானே” என்று ரணில் விக்ரமசிங்க பதில் அளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் நீண்ட கால அரசியல் நண்பர்களான ரணில் – மஹிந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை பல வகைகளிலும் பேசுபெருளாக மாறியுள்ளது.

மேலும் விசேடமாக எதிர்பாராத அரசியல் புரட்சியொன்று இந்த சந்திப்பின் பின்னர் ஏற்படக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.