இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .
இந்நிலையில் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும் என்பதுடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்குமெனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.