கொழும்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
30 வயதான திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெண்மணியே அவரின் 52 வயதான காதலனால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் சிவனொலிபாத மலைக்கு சென்னறு வருவதாக கூறி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவர் சில வருடங்களுக்கு முன்னர் அந்த பிரதேசத்தை சேர்ந்த தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியுள்ளார். பின்னர் சுய தொழில் ஈடுபட்டுள்ளார்.
திலினியின் மரணத்தினால் தெப்பனாவ பிரதேச மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நீண்ட காலமாக சுகயீனமடைந்த நிலையில் உள்ள அவரது தாயாருக்கு இது தொடர்பில் எவ்வித விடயமும் இதுவரையில் தெரியாது.
சிறு வயது முதல் திலினியை பார்த்துக்கொள்ளும் உறவுக்கார பெண் ஒருவர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
“திலினிக்கு அம்மா மாத்திரமே உள்ளனர். மரணத்தை தொலைக்காட்சி ஊடாகவே அறிந்துக் கொண்டோம். பொலிஸார் வீட்டிற்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டனர். தகவல் கிடைக்க பின்னர் திலினியின் சகோதரன் கொழும்பிற்கு சென்னறுள்ளார்.
திலினியின் உடலை அடையாளம் காண முடியுமா என தெரியவில்லை அவரது தலையில்லை என்று கூறுகின்றார்கள். இப்படி ஒன்று நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.
அம்மா சுகயீனமடைந்த ஒருவர். அவருக்கு இன்னமும் மகளுக்கு இப்படி நடந்ததென தெரியாது. சிவனொலிபாத மலைக்குக்கு சென்ற மகள் மீண்டும் வருவார் என அம்மா பார்த்துக் கொண்டிருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.