அடுத்த தேர்தல் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்திருந்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்திருக்கின்றது.

அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதுடன் , அந்நபருக்கு தனது சார்பான சிங்கள பௌத்த மக்களும் வாக்களிக்கும் நிலைமை உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் பஸில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவையே போட்டியிடச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாகவும் கூறப்படும் நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விமல் அணிக்குப் பலத்த ஏமாற்றாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.