ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் நிம்மதியினை கொடுத்த யார் இந்த மனிதர்?

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஓட்டுமாவடியில் தனது சொந்தக் காணியில் 3 ஏக்கர் நிலத்தை MFM.ஜௌபர் (முன்னாள் NEW STAR விளையாட்டுக் கழகத்தலைவர்) வழங்கியுள்ளார்.

பொது மையவாடிக்கென ஒதுக்கப்பட்டிருந்த 10 ஏக்கர் காணியில் Covid-19 ஜனாஸாக்களை அடக்க முடியாதென்று அரச தரப்பினர்கள் கூறப்பட்ட நிலையில், அதற்கு மேலிருந்த மேட்டு நிலக்காணியை அடையாளப்படுத்தி இருந்தனர்.

இதனையடுத்து குறித்த தகவலை காணி உரிமையாளரிடம் அறிவிக்க இஸ்தலத்திற்குச் சென்ற போது எந்தவித தயக்கமுமின்றி “இது எமது சமூகத்திற்கான பாரிய பணி” என்று கூறியதுடன், “எமது ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல் அடக்கம் செய்வதே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கவலையாக இருந்த விடயம், அதற்காக வேண்டி அடையாளப்படுத்திய எனது சொந்த காணியை வழங்குவதில் எனக்கு எதுவித கவலையும் இல்லை” என்று பெருமனதுடன் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கென இடம் ஒதுக்காத நிலையில் கிழக்கில் பல செல்வந்தர்கள் இருந்தும் , அவர்கள் அடக்கம் செய்வதற்கு நிலம் வழங்க முன்வராத நிலையில் ன்னாள் NEW STAR விளையாட்டுக் கழகத்தலைவர் மனமுவந்து தனது நிலத்தினை வழங்கியுள்ளமை தொடர்பில் இஸ்லாமியர்கள் பலரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த காணிக்கு மாற்றீடாக பிரதேச சபை, பிரதேச செயலகம் அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கலிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர்.