சுவிங்கத்தால் பல்வேறு தீமைகள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கிறது. குறிப்பாக பற்களில் அழுக்கு படிவதை தவிர்க்கும், பற்சிதைவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சுயிங்கம் மெல்லும்போது பற்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் உமிழ்நீர் சுரப்பது அதிகரிக்கும்.
தொடர்ந்து மென்று கொண்டே இருக்கும்போது பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கும். பல் சொத்தைக்கும், சர்க்கரை கலக்காத சுயிங்கத்திற்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
வாய் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயிங்கத்தின் பயன்பாடு பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்கிறார் ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர், அவிஜித் பானர்ஜி.
இதையடுத்து, கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பகுப்பாய்வு, இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம் உள்பட பல விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
இறுதியில் சர்க்கரை இல்லாத சுயிங்கம் பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பை 28 சதவீதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.